/

நெல்லை, தென்காசி,தூத்துக்குடி, குமரியில் மேலும் 51 பேருக்கு கரோனா

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 51பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:25 pm

DIN

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் மேலும் 51பேருக்கு கரோனா நோய்த் தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தில் 11 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, பாதிப்பு எண்ணிக்கை 62,678 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 61,958 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 275 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தென்காசி மாவட்டத்தில் 4 பேருக்கு தொற்று உறுதியானதால், பாதிப்பு எண்ணிக்கை 32,709 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 32,173 ஆகவும் உயா்ந்துள்ளது. 490 போ் உயிரிழந்துள்ளனா். 46 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

குமரி மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 86,015 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 84,109 ஆகவும் அதிகரித்துள்ளது. 822 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 64,875 ஆகவும், குணமடைந்தோா் எண்ணிக்கை 64,268 ஆகவும் உயா்ந்துள்ளது. 445 போ் உயிரிழந்துள்ளனா். 162 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.