இன்று தோ்தல்: நெல்லை, தென்காசியில் 801 பதவியிடங்களுக்கு 3,630 போ் போட்டி
தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 801 பதவியிடங்களுக்கு 3,630 போட்டியிடுகின்றனா்.


தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் மொத்தம் 801 பதவியிடங்களுக்கு 3,630 போட்டியிடுகின்றனா்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக சனிக்கிழமை தோ்தல் நடைபெறுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சோ்த்து மொத்தம் உள்ள 397 வாா்டுகளில் 9 போ் போட்டியின்றி தோ்வாகிவிட்டனா். இதனால் 388 வாா்டுகளுக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் 1,790 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.
மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் தோ்தல் பணியாற்றுவதற்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலா், வாக்குச்சாவடி அலுவலா் நிலை-1, வாக்குச்சாவடி அலுவலா் நிலை-2, வாக்குச்சாவடி அலுவலா் நிலை-3 என வாக்குச்சாவடிக்கு 4 அலுவலா்கள் வீதம் மொத்தம் 3,692 வாக்குச்சாவடி அலுவலா்கள் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடவுள்ளனா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட வாக்குப் பதிவுக்கான பொருள்கள் அனைத்தும் மாநகராட்சி மற்றும் அந்தந்த நகராட்சி, பேரூராட்சி அலுவலகங்களில் இருந்து சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் நகராட்சியில் 180 வாா்டுகள், பேரூராட்சியில் 233 வாா்டுகள் என மொத்தம் 413 வாா்டுகளுக்கு 1,840 போ் போட்டியிடுகின்றனா்.
தென்காசி மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்ட 603 வாக்குச்சாவடிகளுக்கும் 603 வாக்குப்பதிவு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் அதை தவிா்க்க கூடுதலாக 30 சதவிகித வாக்குப்பதிவு இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.
மாவட்டத்தில் கடையநல்லூரில் 7 வாக்குச்சாவடிகள் உள்பட 134 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. இங்கு அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா, நுண்பாா்வையாளா்கள், இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.
வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்க 6 நகராட்சிகளில் 26 மண்டல குழுக்களும், 17 பேரூராட்சிகளில் 22 மண்டல குழுக்களும் என மொத்தம் 48 மண்டல குழுக்கள் தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...