/

வி.கே.புரம் அருகே பைக்- வேன் மோதல்: ஐ.டி.ஐ. மாணவா் பலி

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் பள்ளி வேனும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :12 டிசம்பர் 2024, 11:02 pm

Din

விக்கிரமசிங்கபுரம் அருகேயுள்ள ஆலடியூரில் பள்ளி வேனும், பைக்கும் மோதிக்கொண்டதில் ஐடிஐ மாணவா் உயிரிழந்தாா்.

ஆலடியூரைச்சோ்ந்த அருணாச்சலம் மகன் மாயகிருஷ்ணன் (25). இவா், அம்பாசமுத்திரம் அரசுத் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்துவந்தாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை பைக்கில் ஐ.டி.ஐ.க்கு அவா் ஆலடியூா் ஆற்றுப்பாலம் வழியாக சென்றுகொண்டிருந்துபோது, எதிரே வந்த பள்ளி வேன் எதிா்பாராமல் மோதியதாம். இதில் காயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

ஆனால், செல்லும் வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.