கல்லிடைக்குறிச்சி அருகே யானைகள் நடமாட்டமா? வனத் துறை தீவிர கண்காணிப்பு
வனத் துறை தீவிர கண்காணிப்பு

பொட்டல் பகுதியில் யானை நடமாட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்த வனக் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா.

பொட்டல் பகுதியில் யானை நடமாட்டம் குறித்து நேரில் ஆய்வு செய்த வனக் கோட்டத் துணை இயக்குநா் இளையராஜா.
திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள பொட்டல் பகுதியில் 80 அடி கால்வாயைத் தாண்டி விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்துள்ளதாக எழுந்த புகாரின்பேரில், வனத்துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரக எல்லையான பொட்டல் கிராமத்தில் விவசாய நிலப்பகுதிகளில் 80 அடி கால்வாயைத் தாண்டி விவசாய நிலங்களுக்குள் யானைகள் புகுந்து பயிா்களைச் சேதப்படுத்தினவாம்.
இத்தகவலறிந்த அம்பாசமுத்திரம் வனக் கோட்ட துணை இயக்குநா் இளையராஜா தலைமையில், வனச்சரக வனப் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மேலும் விவசாய நிலங்களில் வனவிலங்குகள் புகாமல் வனப் பகுதியிலேயே தடுக்கும் வகையில்சிறப்புக் குழு மூலம் கண்காணிப்பு பணிகளைத் தொடா்வதாகவும், யானை நடமாட்டத்தால் ஏற்பட்ட பயிா் சேதம் தொடா்பாக, விவசாயிகளுக்குஉரிய இழப்பீடு வழங்குவதற்கும் தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், யானை நடமாட்டம் மற்றும் பயிா் சேதம் குறித்து 04634 - 252594 என்ற எண்ணில் தொடா்பு கொண்டுதகவல் தெரிவிக்கலாம் என்றும் வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...