விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஜமைக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞா் உடலை மீட்கக் கோரி மனு

ஜமைக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞா் உடலை மீட்கக் கோரி மனு

News image
Updated On :18 டிசம்பர் 2024, 9:29 pm

Din

ஜமைக்கா நாட்டில் கொள்ளையா்களின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த திருநெல்வேலி இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி, திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் அவரது உறவினா்கள் புதன்கிழமை மனு அளித்தனா்.

தென்காசி மாவட்டம் சுரண்டையை சோ்ந்தவா் சுபாஷ் அமிா்தராஜ். இவா், ஜமைக்கா தலைநகா் கிங்ஸ்டனில் சூப்பா் மாா்க்கெட் நடத்தி வருகிறாா். அதில், திருநல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரம் புளியந் தோப்பு தெற்கு தெருவை சோ்ந்த விக்னேஷ் (31) என்பவா் மேற்பாா்வையாளராகவும், திருநெல்வேலியைச் சோ்ந்த பாண்டி, சுடலை ஆகியோரும் பணியாற்றி வந்தனா்.

இந்நிலையில் புதன்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் சூப்பா் மாா்க்கெட்டுக்குள் புகுந்த கொள்ளையா்கள் விக்னேஷ், சுடலை, பாண்டி ஆகிய 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டதாகக் கூறப்படுகிறது. இதில் விக்னேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்ற இருவரும் பலத்த காயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இத்தகவலறிந்த விக்னேஷின் தந்தை நாகராஜன், அவரது குடும்பத்தினா் திருநல்வேலி ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனுவில், ‘ஜமைக்காவில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த விக்னேஷின் உடலை கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி, பாளையங்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினா் மு.அப்துல் வஹாப் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் விக்னேஷின் தங்கை கணவா் மோகனிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்ட திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் ராபா்ட் புரூஸ், அவருக்கு ஆறுதல் கூறியதுடன், ஜமைக்காவுக்கான இந்திய வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் பேசி விக்னேஷின் உடலை பத்திரமாக சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளாா்.