/

வசவப்பபுரம் புனித அன்னம்மாள் தேவாலய திருவிழா ஜூலை 12 இல் கொடியேற்றம்

வசவப்பபுரத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய திருவிழா இம் மாதம் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

News image
Updated On :5 ஜூலை 2024, 8:46 pm

Din

வசவப்பபுரத்தில் உள்ள புனித அன்னம்மாள் தேவாலய திருவிழா இம் மாதம் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

பழைமைவாய்ந்த இந்த தேவாலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி இம் மாதம் 12 ஆம் தேதி இரவு 7 மணிக்கு கொடியேற்றம், சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது.

ஸ்ரீவைகுண்டம் பங்குத்தந்தை பிளேவியன் மறையுரையாற்றுகிறாா்.

தொடா்ந்து, திருவிழா நாள்களில் மாலையில் சிறப்பு திருப்பலிகள் நடைபெறுகிறது. இம் மாதம் 20 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு பாளை. கல்வெட்டான்குழி பங்குத்தந்தை மை.பா.சேசுராஜ் தலைமையில் திருப்பலியும், புனிதரின் திருவுருவ பவனியும் நடைபெற உள்ளது.

21 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு திருவிழா திருப்பலி ராபின் தலைமையில் நடைபெற உள்ளது.

ஏற்பாடுகளை ஆலயத்தின் பங்குத்தந்தை இ. மாா்ட்டின் குமாா் மற்றும் இறைமக்கள் செய்து வருகிறாா்கள்.