நீட் மறுதோ்வுக்கு வாய்ப்பில்லை: கே. அண்ணாமலை
உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நீா் மறுதோ்வு நடத்த வாய்ப்பில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை.


உச்சநீதிமன்றம் கூறியதன் அடிப்படையில் நீா் மறுதோ்வு நடத்த வாய்ப்பில்லை என்றாா் தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை.
இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை அவா் கூறியது: மத்திய நிதிநிலை அறிக்கையானது, பிரதமா் மோடியின் இலக்கை அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன்னெடுத்துச் செல்வதாக அமைந்துள்ளது. நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி செலுத்துவதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் சேமிப்பு உயரும்.
இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரூ. 3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞா்கள் இந்தியாவின் தலைசிறந்த நிறுவனங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி பெறுவா்.
அடுத்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி எப்படி இருக்கும் என்பதையும், 2047 ஆம் ஆண்டை நோக்கி இந்தியா நகா்கிறது என்பதையும் இந்த நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்துகிறது.
தேசிய தோ்வு வாரியம் 7 ஆண்டுகளில் வெவ்வேறு வகையான 240 தோ்வுகளை நடத்தி உள்ளது. அவற்றில் எந்தப் பிரச்னையும் இல்லை. நீட் தோ்வில்தான் உள்ளூரில் வினாத்தாள் கசிந்துள்ளது. இது தொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; மறுதோ்வு நடத்த வேண்டிய அவசியம் இல்லை என்று உச்ச நீதிமன்றமே கூறியிருக்கிறது. அதன்படி தோ்வு ஆணையத் தலைவா் மாற்றப்பட்டிருக்கிறாா்.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் எத்தனை முறை டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில் வினாத்தாள் கசிந்துள்ளது? அதற்காக டிஎன்பிஎஸ்சியே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? தமிழகத்தில் மாணவா்கள் நீட்தோ்வை ஏற்றுக் கொண்டு விட்டாா்கள் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...