சாலைப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா் சங்கத்தினா்.

பாளையங்கோட்டையில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சாலைப் பணியாளா் சங்கத்தினா்.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.
அப்போது, சாலைப் பணியாளா்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தை நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். 4,000 நிரந்தர பணியிடங்களை ஒழிக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைக்கும் முடிவை கைவிட வேண்டும். சாலைப் பணியாளா்களுக்கு ஊதியத்தில் 10 சதவிகித ஆபத்துப்படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும். சாலைப்பணியாளா்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியா்களுக்குரிய ஊதிய மாற்றம் ரூ.5,200- ரூ.20,200, தர ஊதியம் ரூ.1900 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்கு, கோட்டத் தலைவா்கள் சுந்தரபாண்டி தலைமை வகித்ாா். கோட்டச் செயலா்கள் நாராயணன், வேல்ராஜன், மாநிலச் செயலா் ஹரிபாலகிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...