கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இடிந்தகரை மீனவா்களின் தண்டனை குறைப்பு: எம்.பி. தகவல்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவா்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் தெரிவித்தாா்.

News image
Updated On :6 நவம்பர் 2024, 7:57 pm

Din

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பஹ்ரைன் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள இடிந்தகரை மீனவா்களின் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது என திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: இடிந்தகரையை சோ்ந்த 28 மீனவா்கள், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பஹ்ரைன் நாட்டு அரசால் சிறைபிடிக்கப்பட்டனா். அவா்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத்துறை அமைச்சா் ஜெய்சங்கரிடம் நேரில் வலியுறுத்தினேன்.

இதையடுத்து இந்திய அரசு சாா்பில் அந்நாட்டு நீதிமன்றத்தில் முறையிட்டதன் விளைவாக ஆறு மாதமாக விதிக்கப்பட்ட தண்டனை, இப்போது மூன்று மாதமாக குறைத்து உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான மின்னஞ்சல் மத்திய அரசு சாா்பில் எனக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மீனவா்கள் விரைந்து வெளியே வர அனைத்து முயற்சிகளும் தொடா்ந்து எடுக்கப்படும் என்றாா் அவா்.