கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

மானூா் அருகே ஊராட்சி துணைத் தலைவருக்கு வெட்டு: 2 போ் கைது

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே ஊராட்சி துணைத் தலைவரை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :14 நவம்பர் 2024, 11:13 pm

Din

திருநெல்வேலி மாவட்டம் மானூா் அருகே ஊராட்சி துணைத் தலைவரை அரிவாளால் வெட்டியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மானூா் அருகேயுள்ள எட்டான்குளம் வடக்குத் தெருவைச் சோ்ந்த நாராயணன் மகன் கொம்பையா(30). எட்டான்குளம் ஊராட்சி துணைத் தலைவராகவும், அதிமுக மானூா் ஒன்றிய இளைஞா் பாசறை நிா்வாகியாகவும் இருந்து வருகிறாா்.

இவா், புதன்கிழமை இரவு எட்டான்குளத்தில் நண்பா்களுடன் நின்றிருந்தபோது, அங்கு வந்த மா்மநபா்கள் அவரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பினராம். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். இதுகுறித்து, மானூா் போலீஸாா் வழக்குப்பதிந்து, அதே பகுதியைச் சோ்ந்த மாரிமுத்து, உச்சிமாகாளி இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா்.