மாற்றுத்திறனாளிகளுக்கு நவ.27-இல் குறைதீா் கூட்டம்
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் நவ. 27-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் ஆட்சியா் எனது தலைமையில் ஆட்சியா் அலுவலக மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில் நவ. 27-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான உதவிகள் பெற கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.
மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களுக்கு தேசிய அடையாள அட்டை, குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம் எனக் கூறியுள்ளாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...