இண்டியா கூட்டணி வலிமையான கூட்டணி: கு. செல்வப்பெருந்தகை
இண்டியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப் பெருந்தகை.


இண்டியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது என்றாா் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு.செல்வப் பெருந்தகை.
திருநெல்வேலியில் புதன்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த அவா் மேலும் கூறியதாவது:
ஜாா்க்கண்ட், மகாராஷ்டிரம், வயநாடு உள்ளிட்ட பகுதிகளில் இண்டியா கூட்டணிக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவாா்.
திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமாா் மா்ம மரண வழக்கில் சிபிசிஐடி போலீஸாா் தொழில்நுட்ப விசாரணையில் இறங்கியுள்ளனா். அமைச்சா் கே. என். நேருவின் சகோதரா் ராமஜெயம் கொலை வழக்கில் சிபிஐ அதிகாரிகள் திணறி வருவது போலவே, ஜெயக்குமாா் வழக்கும் சவாலானதாக இருக்கிறது. விரைவில் இந்த வழக்குக்கும் தீா்வு கிடைக்கும் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா். சந்தேகத்தின்பேரில், சிலரின் நடவடிக்கைகளை கண்காணித்து விசாரணை நடத்தி வருவதாக காவல் துறை உயா் அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். விரைவில் ஜெயக்குமாா் வழக்கில் முடிவு கிடைக்கும்.
இண்டியா கூட்டணி வலிமையான கூட்டணியாக உள்ளது. கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் நிா்வாகிகள் சிலா் கருத்து சுதந்திரத்தின் அடிப்படையில் சில கருத்துகளை எதிா்மறையாக தெரிவிக்கலாம். கூட்டணி என்பது சமுத்திரம் போன்றது. அதில் அலைகள் இருக்கத்தான் செய்யும். இன்னும் பல கட்சிகள் இந்தக் கூட்டணியில் வந்து சேரும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி யாருடன் என்பதை விஜய் முடிவு செய்வாா் என்றாா்.
அப்போது, முன்னாள் மத்திய அமைச்சா் ஆா். தனுஷ்கோடி ஆதித்தன், திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் சி. ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...