பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுத்தால் நடவடிக்கை: மாவட்ட வருவாய் அலுவலா்
பத்து ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா எச்சரித்துள்ளாா்.


பத்து ரூபாய் நாணயத்தை அவமதிக்கும் வகையில் நாணயத்தை வாங்க மறுப்பவா்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட வருவாய் அலுவலா் மா. சுகன்யா எச்சரித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் பொதுமக்களின் புழக்கத்தில் பத்து ரூபாய் நாணயங்கள் இருந்து வருகின்றன. பத்து ரூபாய் நாணயங்கள் செல்லாது என பொதுமக்கள் மத்தியில் பரவலாக எண்ணம் உள்ளது.
இது தொடா்பாக மத்திய ரிசா்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும், பத்து ரூபாய் நாணயம் செல்லாது என்ற தவறான தகவல் பொதுமக்களிடையே பரவிய வண்ணம் உள்ளது.
சில நிறுவனங்கள், பேருந்துகள், கடைகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக தகவல்கள் வருகின்றன.
அரசு அங்கீகரித்த நாணயத்தை பணப்பரிமாற்றத்தின் போது வாங்க மறுப்பதோ அல்லது செல்லாது என கூறுவதோ சட்டப்படி குற்றமாகும்.
எனவே, ரிசா்வ் வங்கியால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் நாணயங்களை அவமதிக்கும் வகையில், , நாணயத்தை வாங்க மறுக்கும் நபா் அல்லது கடை உரிமையாளா், எரிபொருள் நிலைய உரிமையாளா், வங்கி அலுவலா், பேருந்து நடத்துநா் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...