திருநெல்வேலி
வருவாய்த்துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக போராட்டம்
திருநெல்வேலியில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருநெல்வேலியில் வருவாய்த் துறை அலுவலா்கள் 2 ஆவது நாளாக புதன்கிழமையும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இளநிலை மற்றும் முதுநிலை வருவாய் ஆய்வாளா் பெயா் மாற்ற விதி திருத்த அரசாணையை உடனே வெளியிட வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளா்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
2 ஆவது நாளாக புதன்கிழமையும் வருவாய்த்துறையினா் பணிகளைப் புறக்கணித்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் ஆட்சியா் அலுவலகம், கோட்டாட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.