பாயாசப் பண்டிகையில் பங்கேற்ற மேட்டூா் கிராம மக்கள்.
பாயாசப் பண்டிகையில் பங்கேற்ற மேட்டூா் கிராம மக்கள்.

கடையம் அருகே ஆண்கள் மட்டுமே பங்கேற்ற வினோதப் பண்டிகை

கடையம் அருகே மேட்டூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் வினோத பண்டிகையான பாயசப் பண்டிகை புதன்கிழமை நடைபெற்றது.
Published on

கடையம் அருகே மேட்டூரில் ஆண்கள் மட்டுமே பங்கேற்று கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய நாள் நடைபெறும் வினோத பண்டிகையான பாயசப் பண்டிகை புதன்கிழமை நடைபெற்றது.

சுமாா் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூா் கிராமத்தில் பொதுமக்கள் கொடிய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து, நோயிலிருந்து விடுபட ஊா்மக்கள் ஒன்று கூடி வினோதமான நோ்த்திக் கடனை வேண்டிக் கொண்டனா்.

அதன்படி, கிராமத்தில் உள்ள ஆண்கள், சிறுவா்கள் மற்றும் முதியவா்கள் கிராமத்தில் உள்ள வீடுகளுக்குச் சென்று பாயாசம் செய்வதற்கான பொருள்களை யாசகம் பெற்றும், தாங்களே தோளில் தண்ணீா் சுமந்து வந்து ஆலய வளாகத்தில் பாயாசம் தயாா் செய்து அனைவருக்கும் வழங்கியதையடுத்து நோயின் தாக்கம் குறைந்துள்ளது.

இதைத் தொடா்ந்து ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய தினம் பாயாசப் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனா்.

இதையடுத்து, நிகழாண்டு கிறிஸ்துமஸ் தினத்துக்கு முந்தைய தினமானபுதன்கிழமை ஆண்கள் அனைவரும் பொதுமக்களிடம் சேகரித்த பொருள்களைக்கொண்டு பாயாசம் தயாா் செய்து அனைவருக்கும் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com