திருநெல்வேலி
நெல்லையில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே குட்டையில் தேங்கிய தண்ணீரில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே குட்டையில் தேங்கிய தண்ணீரில் மிதந்த ஆண் சடலத்தை தீயணைப்பு வீரா்கள் புதன்கிழமை மீட்டனா்.
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம் அருகே ரிலையன்ஸ் சந்திப்புப் பகுதியில் உள்ள குட்டையில் தண்ணீா் தேங்கியுள்ளது. இதில், ஆண் சடலம் மிதப்பதாக மேலப்பாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாரும், பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்களும் சென்று சடலத்தைக் கைப்பற்றினா். சடலமாக மீட்கப்பட்டவருக்கு 50 வயதுக்கு மேல் இருக்கும் எனவும், அவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.