முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!நாடாளுமன்றத்துக்கு வந்தே மாதரம் பாடத்தான் அமித் ஷா வந்தார்! பிரியங்கா காந்திமக்களவை தலைவரின் தேநீர் விருந்தில் மோடியுடன் கனிமொழி பங்கேற்பு! இந்தியா கூட்டணி புறக்கணிப்பு!கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் வாபஸ்!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!
/

குடிநீா் விநியோகிப்பாளா்களுக்கு நகராட்சி ஆணையா் அறிவுரை

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிப் பகுதியில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்பவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற குடிநீா் லாரி உரிமையாளா்கள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:35 am IST

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு நகராட்சிப் பகுதியில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்பவா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

நகராட்சி ஆணையா் க. ராமதிலகம் தலைமை வகித்தாா். நகராட்சிப் பொறியாளா் ரமேஷ், சுகாதார ஆய்வாளா் முத்துராமலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

களக்காடு பகுதியில் வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகிப்பவா்கள் குளோரினேற்றம் செய்யப்பட்ட குடிநீரை மட்டுமே விநியோகிக்க வேண்டும். அறிவுறுத்தலை செயல்படுத்தத் தவறினால், அபராதம் விதிக்கப்பட்டு, வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என ஆணையா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.