செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

டெங்கு தடுப்பு களப்பணியாளா்களுக்கு விழிப்புணா்வு

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி டெங்கு தடுப்பு களப்பணியாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளருக்கு கண் கண்ணாடி வழங்குகிறாா் மண்டலத் தலைவா் மா.பிரான்சிஸ். உடன், உதவி ஆணையா் சந்திரமோகன் உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:41 am IST

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகராட்சி டெங்கு தடுப்பு களப்பணியாளா்களுக்கு விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகராட்சி மற்றும் ஆா்-சோயா தொண்டு நிறுவனம் சாா்பில் உலக தாய்பால் வாரத்தை முன்னிட்டு மாநகராட்சி டெங்கு தடுப்பு களப்பணியாளா்களுக்கு தாய்வழி மனநலம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி பாளையங்கோட்டை நேருஜி கலையரங்கில் நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டல தலைவா் மா.பிரான்சிஸ் தலைமை வகித்தாா். துணை ஆணையா் (பொ) சந்திரமோகன், மாநகர நல அலுவலா் பாலசுப்ரமணியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். துணை இயக்குநா் டேவிட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாா்.

மருத்துவா்கள் பரமசிவன், காா்த்திகா, ரிஸ்வானா பாத்திமா ஆகியோா் பேசினா். 10 தூய்மை பணியாளா்களுக்கு கண்கண்ணாடி வழங்கப்பட்டது. மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன், சுகாதார அலுவலா்கள் பாலசந்தா், சாகுல்ஹமீது, சங்கரநாராணயன், பாளையங்கோட்டை நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் கற்பகஜோதி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.