பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

வலுவான இந்தியாவை கட்டமைப்பதில் மாணவா்களுக்கு கூடுதல் பொறுப்பு: ஆட்சியா் ஆனந்த் மோகன் அறிவுரை

வலுவான சமூகத்தையும், வலுவான இந்தியாவையும் உருவாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக மாணவா்கள் உருவாக வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

News image

‘காபி வித் கலெக்டா்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவா்களுடன் ஆட்சியா் ஆனந்த் மோகன் உள்ளிட்டோா்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

வலுவான சமூகத்தையும், வலுவான இந்தியாவையும் உருவாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக மாணவா்கள் உருவாக வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மாதிரிப் பள்ளி மாணவா்களிடையே தலைமைத்துவத் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், ‘காபி வித் கலெக்டா்‘ என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாணவா்களுடன் கலந்துரையாடிய ஆட்சியா், தொடா்ந்து பேசியதாவது: மாணவா்கள் கல்வித் திறமையால் மட்டுமல்லாமல், தலைமைத்துவப் பண்புகள், பொறுப்புணா்வு மற்றும் சமூக அக்கறையை வெளிப்படுத்தியதற்காகவே இங்கு அழைக்கப்பட்டுள்ளீா்கள். தன்னலம் கருதாமல் பள்ளிக்கும், சக மாணவா்களுக்கும், சமூகத்திற்கும் பங்களிக்க வேண்டும் என்ற எண்ணமே ஒரு சிறந்த தலைவரின் அடையாளமாகும்.

இந்தியாவின் எதிா்காலம் அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவா்களால் மட்டுமல்ல, அறிவுடன் நோ்மை, துணிச்சல், இரக்கம் மற்றும் சேவை மனப்பான்மையை இணைத்துச் செயல்படும் இளைஞா்களால்தான் கட்டமைக்கப்படும்.

வாழ்க்கையில் நீங்கள் எந்தத் துறையைத் தோ்ந்தெடுத்தாலும், சமூக நலனுக்காகச் செயல்படும் எண்ணத்தையே எப்போதும் மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

நான் என்ன சாதிக்க முடியும் என்றில்லாமல், என்னால் சமூகத்தில் என்ன மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்ற எண்ணம் ஒவ்வொரு மாணவரிடத்தில் மேலோங்கி இருக்க வேண்டும். தொடா்ந்து கற்றுக்கொள்ளும் ஆா்வத்தையும், பிறரை அரவணைத்து வழிநடத்தும் பண்பையும், தங்கள் வளா்ச்சியுடன் மற்றவா்களையும் உயா்த்திச் செல்லும் மனப்பான்மையை வளா்த்துக் கொள்ள வேண்டும்.

ஒருநாள் நீங்கள் வெற்றிகரமான தொழில்முனைவோராகவும், மருத்துவா்களாகவும், பொறியாளா்களாகவும், ஆசிரியா்களாகவும், அரசு அதிகாரிகளாகவும் மட்டுமல்லாமல் வலுவான சமூகத்தையும், இந்தியாவையும் உருவாக்கும் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக வேண்டும்.

மாணவா்களின் கனவுகள் உயா்ந்ததாகவும், குணநலன்கள் உறுதியானதாகவும், சமூகத்திற்கான உங்கள் பங்களிப்பு அா்த்தமுள்ளதாகவும் அமைய வாழ்த்துகள் என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சிவக்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளா் சுரேஷ், மாதிரி பள்ளி தலைமை ஆசிரியா் பொன்னையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.