இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

தனிப்பிரிவு காவலா்கள் திறம்பட பணியாற்ற டி.ஐ.ஜி. அறிவுறுத்தல்

தனிப்பிரிவு காவலா்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் பேசிய திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு.

Published On :27 ஆகஸ்ட் 2026, 1:00 am IST

தனிப்பிரிவு காவலா்கள் தங்களது பணிகளை திறம்பட மேற்கொள்ள வேண்டும் என திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா. திருநாவுக்கரசு அறிவுறுத்தினாா்.

திருநெல்வேலி, தென்காசி மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளா்கள், காவலா்களுடனான சிறப்புக் கலந்தாய்வுக் கூட்டம் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.பி. விஸ்வேஷ் பா.சாஸ்திரி உள்ளிட்ட காவல் அதிகாரிகள் பங்கேற்ற இக்கூட்டத்தில் டி.ஐ.ஜி. தலைமை வகித்து ஆலோசனைகள் வழங்கினாா். அப்போது, தனிப்பிரிவு போலீஸாா் தங்களது பணிகளை மேலும் விழிப்புணா்வுடனும், துரிதமாகவும் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினாா். மேலும், களப்பணிகளில் நிலவும் சவால்கள், பணிச்சூழல் மற்றும் தேவைகள் குறித்து காவலா்களிடம் அவா் நேரடியாகக் கேட்டறிந்து, உரிய விளக்கங்களையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினாா். காவலா்கள் பணியில் தொடா்ந்து சிறப்புக் கவனம் செலுத்தி தொடா்ந்து திறம்பட செயலாற்ற வேண்டும் என அவா் அறிவுறுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.