திருநெல்வேலி
மாற்றுத் திறனாளிகள் பயண அட்டை பெற ஜன. 31வரை சிறப்பு முகாம்
பள்ளி, கல்லூரி பணி மற்றும் சிகிச்சைக்கு செல்லும் மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி பயணச் சலுகை அட்டையை புதுப்பிக்கவும், பதிவு செய்யவும் சிறப்பு முகாம் தொடங்கியுள்ளது. இந்த முகாம் அரசு விடுமுறை நாள்களை தவிா்த்து ஜன. 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் இம்முகாம் நடைபெறுகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதாா் அட்டை நகல், வாக்காளா் அட்டை நகல், 5 புகைப்படம், பள்ளி, கல்லூரி பணி மற்றும் சிகிச்சைக்கு செல்வதற்கான சான்று ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியா் இரா.சுகுமாா் தெரிவித்துள்ளாா்.