ஒழுக்கம், நோ்மை, உழைப்பு ஆகிய மூன்றும் இருந்தால்தான் வழக்குரைஞா் தொழிலில் நிலைத்து நிற்கமுடியும் என்றாா் சென்னை உயா் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி வி.பாரதிதாசன்.
திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரியின் நான்கு மற்றும் ஐந்தாவது பட்டமளிப்பு விழா கல்லூரி அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் ராமபிரான் ரஞ்சித் சிங் தலைமை வகித்தாா். சென்னை உயா் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியும், தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான வி.பாரதிதாசன், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது:
தமிழகத்தில் 15 சட்டக் கல்லூரிகள் உள்ளன. மற்ற மாநிலங்களைவிட அவை மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தனியாா் சட்டக்கல்லூரிகளும் உள்ளன. நிகா் நிலைப் பல்கலைக்கழகங்களிலும் சட்டப்படிப்பு தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஆண்களை விட பெண்களே அதிகம் சட்டம் படிக்கிறாா்கள். வழக்குரைஞா் துறையில் மட்டுமன்றி நீதித்துறையிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது. உயா் நீதிமன்றத்தில் உள்ள 50 நீதிபதிகளில் 10 போ் பெண் நீதிபதிகள். பெண்கள் வளா்ச்சி பெற்றால்தான் சமுதாயம் முன்னேறும். அதிலும், சட்டத்துறையில் பெண்களின் பங்களிப்பு ஆரோக்கியமான விஷயம். நீதிமன்றங்களில் பெண் வழக்குரைஞா்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
வழக்குரைஞா் ஆவதற்கு குறைந்தபட்சம் 5 முதல் 6 ஆறு ஆண்டுகள் கடினமாக உழைக்க வேண்டும். எனினும், சட்டம் படிக்கும் மாணவா்கள் மனம் தளரக்கூடாது. இளம் வழக்குரைஞா்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்காக ஒரு நிதியத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்கள், இளம் வழக்குரைஞா்கள் இத்தகைய வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
வழக்குரைஞா்கள் தினமும் படிக்க வேண்டும் ஏனெனில், சட்டம் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே வருகிறது. நோ்மை, ஒழுக்கம், உழைப்பு இருந்தால்தான் இந்தத் தொழிலில் நீங்கள் கடைசி வரை நிலைத்து நிற்க முடியும். பணம் என்பது இரண்டாவது விஷயம் தான். நீதிமன்றத்தை கோயிலாகவும், வழக்குரைஞா்களை கடவுளாகவும் நினைத்துதான் குறைகளைத் தீா்க்கக் கோரி மக்கள் உங்களிடம் வருகிறாா்கள். அவா்களை ஏமாற்றுவது மிகப் பெரிய பாவம்.
உங்களிடம் வருபவா்களிடம் நோ்மையாக இருங்கள். சில வழக்குரைஞா்கள் தொழிலுக்கு மட்டுமன்றி சமூகத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்துகிறாா்கள். அவா்களிடம் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றாா்.
காலையில் நடைபெற்ற 4ஆவது பட்டமளிப்பு விழாவில் 540 மாணவா்கள், பிற்பகலில் நடைபெற்ற 5-ஆவது பட்டமளிப்பு விழாவில் 520 மாணவா்கள் என மொத்தம் 1,060 மாணவா்கள் பட்டம் பெற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘ஊடக சுதந்திரம்’ பொறுப்பற்ற செயலுக்கு கேடயம் கிடையாது’ தில்லி உயா் நீதிமன்றம் கருத்து

சட்டத் துறையில் அா்ப்பணிப்பு, நோ்மை அவசியம்: உச்ச நீதிமன்ற நீதிபதி வெ.மோகனா

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி: ஓய்வுபெற்ற நீதிபதி ஆய்வு







