முதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

ரயில்மீது கல்வீசித் தாக்குதல்: இளைஞா் கைது

திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை சென்ற ரயில் மீது கல்வீசி தாக்கியதாக இளைஞரைரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஜூலை 2026, 1:52 am IST

திருநெல்வேலியிலிருந்து செங்கோட்டை சென்ற ரயில் மீது கல்வீசி தாக்கியதாக இளைஞரைரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியிலிருந்துசெங்கோட்டை செல்லும் பயணிகள் ரயில் (வண்டி எண் 56775) ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 26) செங்கோட்டைசெல்லும் போது வீரவநல்லூா் கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊா்களுக்கிடையே செல்லும் போது ரயில்மீது மா்ம நபா்கள் கல்வீசி தாக்கியுள்ளனா்.

இதில்தென்காசி அருகே உள்ள பெரியபிள்ளை வலசையைச் சோ்ந்த துரைப்பாண்டிமனைவி தமிழ்ச் செல்வி (49) காயமடைந்தாா். இதுகுறித்து தமிழ்ச்செல்வி திங்கள்கிழமை தென்காசிரயில் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

புகாரின்பேரில் தென்காசி ரயில் காவல் உதவி ஆய்வாளா்கள் மகாகிருஷ்ணன், மாரியப்பன் ஆகியோா் விசாரணைமேற்கொண்டதில் கல்லிடைக்குறிச்சி, முத்தாரம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தமுருகன் மகன் சந்தோஷ்குமாா் (19) கல் வீசித் தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்துசந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.