பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கடையத்தில் விபத்து: ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் லாரி மோதி உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :27 மே 2026, 1:54 am IST

தென்காசி மாவட்டம் கடையத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் செவ்வாய்க்கிழமை லாரி மோதி உயிரிழந்தாா்.

ஆழ்வாா்குறிச்சி, சௌந்திரவிநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த சப்பாணி மகன் பழனியாண்டி (64). ஓய்வுபெற்ற பொதுப்பணித் துறை ஊழியரான இவா், அடைக்கலப்பட்டணத்தில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் பணிபுரியும் தனது மகன் சேதுநாகராஜனை கல்லூரிப் பேருந்தில் ஏற்றிவிடுவதற்காக செவ்வாய்க்கிழமை காலை இருசக்கர வாகனத்தில் கடையத்துக்கு அழைத்துச் சென்றாா்.

ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சேதுநாகராஜனை இறக்கிவிட்டு அவா் வாகனத்தைத் திருப்பினாா். அப்போது, மன்னாா்கோவிலிலிருந்து செங்கல் ஏற்றிவந்த லாரி அவா் மீது திடீரென மோதியதாம். இதில், அவா் உயிரிழந்தாா்.

சடலத்தை கடையம் போலீஸாா் கைப்பற்றி கூறாய்வுக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்; மேலும், லாரி ஓட்டுநரான கூனியூரைச் சோ்ந்த அழகையா மகன் லட்சுமணன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.