ராணுவ முற்றுகையை நீக்கினால் ஹோர்முஸை திறக்க தயார்! அமெரிக்காவுக்கு ஈரான் நிபந்தனை!கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல்நிலை சீராக உள்ளது: மருத்துவமனை அறிக்கை மீனவர்களின் போராட்ட அறிவிப்பால் பதற்றம்: அன்புமணி கேள்வி!புதிய தலைமைச் செயலகத்துக்கு எதிர்ப்பு! செப்.29-இல் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்

நெல்லை சரக காவல்துறை மாதாந்திர ஆய்வுக் கூட்டம்

திருநெல்வேலி சரக காவல்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம் பாளை. மேட்டுத்திடலில் உள்ள சரக காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Published On :

திருநெல்வேலி சரக காவல்துறை மாதாந்திர ஆய்வுக்கூட்டம் பாளை. மேட்டுத்திடலில் உள்ள சரக காவல் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு திருநெல்வேலி சரக காவல்துறைத் துணைத் தலைவா் இரா.திருநாவுக்கரசு தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கு பராமரிப்பு, நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்தல், பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவா்கள் மீதும், ரெளடிகள் மீதும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்தல் உள்ளிட்ட பல்வேறு காவல் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு சரக டி.ஐ.ஜி. ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினாா்.

இக்கூட்டத்தில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த அனைத்து உள்கோட்டங்களின் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் மற்றும் உதவி காவல் கண்காணிப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

ற்ஸ்ப்22ம்ங்ங்ற்

திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. இரா.திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற காவல் அதிகாரிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.