/

ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

கோவில்பட்டி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை

News image
Updated On :3 அக்டோபர் 2012, 12:06 pm

dinamani

கோவில்பட்டி அருகே ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸôர் தேடி வருகின்றனர்.

  கோவில்பட்டியையடுத்த சாலைப்புதூர் மஞ்சு நகரைச் சேர்ந்த சீனிவாசன் மகன் வீராச்சாமி (38). வேம்பார் அருகேயுள்ள தங்கம்மால்புரம் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வரும் இவர், தனது குடும்பத்தாருடன் கடந்த மாதம் 29-ம் தேதி கோயம்புத்தூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலை கோவில்பட்டியில் உள்ள வீட்டுக்கு திரும்பினாராம்.

 வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்ட அவர்,  உள்ளே சென்று பார்த்தபோது பீரோவிலிருந்த 4 கிராம் எடையுள்ள ஒரு ஜோடி கம்மல் மற்றும் ரொக்கப்பணம் ரூ.600 திருடு போயிருப்பது தெரியவந்தது.

  இதுகுறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸôர் வழக்குப் பதிந்து, வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.