திராவிட கட்சிகளைக் கண்டித்து மனிதச் சங்கிலி
காந்தி, அண்ணா, பெரியாரின் கொள்கைகளான பூரண மதுவிலக்கை


காந்தி, அண்ணா, பெரியாரின் கொள்கைகளான பூரண மதுவிலக்கை திராவிட கட்சிகள் மறந்ததைக் கண்டித்து தூத்துக்குடியில், சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சி சார்பில் மதுவிலக்கு ஒழிப்பு மனிதச் சங்கிலி போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட பொதுச் செயலர் சமீர் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொருளாளர் முகமது அலி, செயற்குழு உறுப்பினர் அஸ்ரா அலி பைஜி, மகளிர் அணி அமைப்பாளர் சுபைதா, மாநகரத் தலைவர் ஷேக் மைதீன் உள்பட பலர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டனர். போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானோர் காந்தியடிகளின் முகமுடியை அணித்து போராட்டத்தில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...