மினி மாரத்தான்: கருங்குளம் அரசு பள்ளி முதலிடம்
தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான்


தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் கருங்குளம் அரசுப் பள்ளி மாணவர் முதலிடத்தைப் பிடித்தார்.
தூத்துக்குடி காமராஜ் கல்லூரி பழைய மாணவர் சங்க 30-வது ஆண்டு விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். காமராஜ் கல்லூரிச் செயலர் ராஜேந்திரன் முன்னிலையில், தூத்துக்குடி நகர போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணன் போட்டியை கொடியசைத்து தொடக்கி வைத்தார்.
ஆண்கள் பிரிவில் கருங்குளம் அரசுப் பள்ளி மாணவர் மனோ முதல் பரிசாக 1.5 கிராம் தங்க நாணயத்தையும், காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் பள்ளியைச் சேர்ந்த தங்கவேல் முருகன் இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயத்தையும், திருநெல்வேலி அஞ்சல் துறையைச் சேர்ந்த பி.பால்பாண்டி மூன்றாம் பரிசாக அரை கிராம் தங்க நாணயத்தையும் பெற்றனர்.
பெண்களுக்கான பிரிவில் திருநெல்வேலி புனித ஜோசப் பள்ளியைச் சேர்ந்த எஸ்.சுப்புலட்சுமி முதல் பரிசாக ஒரு கிராம் தங்க நாணயத்தையும், அதே பள்ளியைச் சேர்ந்த ஆறுமுகக்கனி 2-ம் பரிசாக அரை கிராம் தங்க நாணயத்தையும், காட்டு நாயக்கன்பட்டி நடராஜன் பள்ளியைச் சேர்ந்த முத்துலட்சுமி 3-ம் பரிசாக வெள்ளி பரிசையும் பெற்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற பெண்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் முதல் பரிசை திருநெல்வேலி ஜோசப் பள்ளியைச் சேர்ந்த எஸ். அமுதா வென்றார்.
இரண்டாம் பரிசை காமராஜ் கல்லூரியைச் சேர்ந்த மாணவி முத்து சந்தனமாரியும், மூன்றாம் பரிசை மகேஸ்வரியும் பெற்றனர். பின்னர் நடைபெற்ற ஆண்களுக்கான மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டியில் முதல் பரிசை பிரான்சிஸ் சேவியர் பாலிடெக்னிக் மாணவர் ரமேசும், இரண்டாம் பரிசை வ.உ.சி கல்லூரி மாணவர் பி.சுரேஷும், 3-ம் பரிசை திருச்சி பொறியியல் கல்லூரி மாணவர் காஸ்ட்ரோவும் வென்றனர்.
பின்னர், பழைய மாணவர்களுக்கும், தற்போது பயிலும் மாணவர்களுக்கு இடையேயான கைப்பந்து மற்றும் கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இதில், கூடைப்பந்து மற்றும் கைப்பந்து போட்டிகளில் பழைய மாணவர்கள் முதல் பரிசை வென்றனர்.
தொடர்ந்து நடைபெற்ற கல்லூரிகளுக்கு இடையேயான கலைப் போட்டியில் நாட்டுப்புற நடன பிரிவில் முதல் இடத்தை காமராஜ் கல்லூரியும், இரண்டாம் இடத்தை வ.உ.சி. கல்லூரியும், மூன்றாம் இடத்தை ஏ.பி.சி.மகாலட்சுமி மகளிர் கல்லூரியும் பெற்றன. மேற்கத்திய நடனப் போட்டியில் முதல் இடத்தை வ.உ.சி. கல்லூரியும், இரண்டாம் இடத்தை காமராஜ் கல்லூரியும், மூன்றாம் இடத்தை கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியும் பெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...