ஆத்தூர் கோயிலில் மண்டல பூஜை நிறைவு

ஆத்தூர் பழையகிராமம் அருள்மிகு பூரண புஷ்கலா தேவி சமேத அருள்மிகு வீரதர்மசாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா  நடைபெற்றது.
Updated on
1 min read

ஆத்தூர் பழையகிராமம் அருள்மிகு பூரண புஷ்கலா தேவி சமேத அருள்மிகு வீரதர்மசாஸ்தா திருக்கோயிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா  நடைபெற்றது.
இவ்வாலயத்தில் மண்டல பூஜை கடந்த 15ஆம் தேதி தொடங்கி,  25ஆம் தேதி வரை காலை மற்றும் மாலையிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மண்டல பூஜை பூர்த்தி தினத்தன்று அதி காலை மஹா கனபதி ஹோமம் நடைபெற்றது. காலை ஆத்தூர் தெப்பக்குளம் அருள்மிகு செல்வவிநாயகர் ஆலயத்திலிருந்து பால்குடம் எடுத்து வந்து பால் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்களும் அலங்கார தீபாராதனைகளும் நடைபெற்றன.மதியம் அன்னதானம் நடைபெற்றது. மாலையில் சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்து. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  ஏற்பாடுகளை ஆத்தூர் பிராமண சமுதாய மக்கள்  செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com