உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் செட்டிக்குறிச்சி, கயத்தாறு குறுவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 17) நடைபெறுகிறது.
இதுகுறித்து கயத்தாறு சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் பாக்கியலட்சுமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: உழவர் பாதுகாப்புத் திட்டத்தில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் செட்டிக்குறிச்சி மற்றும் கயத்தாறு குறுவட்டத்தில் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஆக.17) நடைபெறுகிறது.
இம்முகாமில், கல்லூரிகளில் படிக்கும் மாணவர், மாணவிகள் தாங்கள் படிக்கும் கல்லூரிகளில் இருந்து உரிய சான்று, ஆதார் அட்டை நகல், வங்கிக் கணக்கு நகல் ஆகியவற்றை முகாமில் கிராம நிர்வாக அலுவலரிடம் சமர்ப்பித்து உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து பயன்பெறலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமாட்சியம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயிலில் திருப்பாவாடை உற்சவம்

வரிவிதிப்பு பிரச்னைகளுக்கு இந்தியா - அமெரிக்கா சுமுகத் தீா்வு: அமெரிக்கத் தூதா் வலியுறுத்தல்

ஜாம்பியா அதிபா் மீண்டும் வெற்றி!

உக்ரைன் கிராமத்தில் ரஷியா ஏவுகணை வீச்சு
விடியோக்கள்
Dimagi Naxal: யாரைச் சொல்கிறார் பிரதமர் மோடி? | PM Modi |


