கோவில்பட்டியில் தலைக்கவச விழிப்புணர்வுப் பிரசாரம்
தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை


தலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் மகேந்திரன் உத்தரவின் பேரில், காவல் துறை சார்பில் போலீஸார் கோவில்பட்டி பகுதியில் விழிப்புணர்வு பிரசாரத்தை ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்டனர்.
கோவில்பட்டி காவல் நிலையம், ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து மேற்கொண்ட இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை டி.எஸ்.பி. ஜெபராஜ் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இந்த பிரசார பேரணி அய்யனேரி, வெங்கடாசலபுரம், இளையரசனேந்தல், பிச்சைத்தலைவன்பட்டி, கஸ்தூரிரங்கபுரம், ஜமீன்தேவர்குளம், பிள்ளையார்நத்தம், படர்ந்தபுளி, தோணுகால் வழியாக இனாம்மணியாச்சியில் நிறைவடைந்தது.
இதில், காவல் துறை உதவி ஆய்வாளர்கள் முத்துவிஜயன், ராமசாமி உள்பட திரளான காவலர்கள் கலந்துகொண்டனர். பேரணியின் போது ஆங்காங்கே பொதுமக்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த துண்டுப் பிரசுரங்களையும் விநியோகித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...