/

பேச்சுப் போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு

தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப்பட்டது. 

Updated On :23 ஜூலை 2018, 8:01 am IST

தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் நடைபெற்ற கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிக்கப்பட்டது. 
தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி சார்பில் பெரியார் - அண்ணா என்ற தலைப்பில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 30-க்கும் மேற்பட்டோர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 
நிகழ்ச்சிக்கு மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் குரு. மத்தேயு ஜெபசிங், மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாவட்ட மாணவரணிச் செயலர் ராஜசேகர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். போட்டியின் நடுவர்களாக திருவள்ளுவர் மன்றச் செயலர் நம். சீனிவாசன், தமிழ் பேராசிரியர் காசிராஜன் ஆகியோர் செயல்பட்டனர். 
போட்டியில், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் பொறியியல் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவி சுதா முதல் பரிசு, கீழஈரால் டான்போஸ்கோ கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவி இசையரசி 2ஆம் பரிசு, நாகலாபுரம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழக உறுப்புக் கல்லூரி மாணவி அனிதா 3ஆம் பரிசும் பெற்றனர். 
இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள் மூவரும் நாகர்கோவிலில் ஆகஸ்ட் மாதம் 12ஆம் தேதி நடைபெறும் மண்டல அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தலா ரூ. 6 ஆயிரம், ரூ. 4 ஆயிரம்,  ரூ. 2 ஆயிரம் முறையே மதிமுக மாவட்டச் செயலர் ஆர்.எஸ். ரமேஷ் வழங்கினார். 
நிகழ்ச்சியில், மதிமுக மாநில நிர்வாகிகள் கேசவன், பொன்ஸ்ரீராம், மோசஸ்சுந்தரம், முத்துச்செல்வன், ஒன்றியச் செயலர்கள் எரிமலை வரதன், குறிஞ்சி, கார்த்திகேயன், ரஞ்சன், மாவட்ட இளைஞரணித் துணைச் செயலர் சரவணன், நகர இளைஞரணிச் செயலர் லவராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.