தூத்துக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், அந்தத் திட்டம் தற்போது கைவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் கப்பல் வடிவில் விரிவாக்கம் செய்யப்படுகிறது.
தூத்துக்குடியில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படும் என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதையடுத்து, பல்வேறு கட்ட முயற்சிக்குப் பிறகு தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி அருகே புதிதாக பேருந்து நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.
போக்குவரத்து நெரிசலை குறைக்க ஊருக்கு வெளியே ஒருங்கிணைந்து பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை இருந்த போதிலும், தற்போதுள்ள பழைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்தாலே போதும் என்றும் பல்வேறு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க மீன்வளக் கல்லூரி அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, அதற்காக அடிக்கல் நாட்ட முயற்சி கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது அந்தத் திட்டம் கைவிடப்படுவதாகவும், அதற்கு பதிலாக தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வது மற்றும் புதிய பேருந்து நிலையத்தை நவீனப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொலிவுறு நகரம் (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்தின் கீழ் பேருந்து நிலைய விரிவாக்கம் மற்றும் நவீனப்படுத்தும் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்தப் பணிகள் இன்னும் ஒன்றரை ஆண்டுகளில் முடிய வாய்ப்பு உள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஆல்பி ஜான் வர்கீஸ் கூறியது: தூத்துக்குடி மாநகராட்சி தற்போது 90.66 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகை 3 லட்சத்து 91 ஆயிரத்து 140 ஆக உள்ளது. தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கடந்த 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. எட்டயபுரம் சாலையில் அமைந்துள்ள புதிய பேருந்து நிலையம் 1993 ஆம் ஆண்டு 9.70 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டது.
இரண்டு பேருந்து நிலையங்களும் தொடங்கப்பட்டு பல ஆண்டுகள் கடந்து விட்டதால் இரண்டு பேருந்து நிலையங்களை நவீனப்படுத்தும் வகையில் திட்டமிடப்பட்டு தொழில்நுட்ப வல்லுநர்களால் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது.
பழைய பேருந்து நிலையத்தில் வாகன நிறுத்துமிடம், பொது மக்கள் பேருந்துக்கு காத்திருக்க வசதியாக இருக்கை வசதிகள், நவீன வணிக வளாகங்கள் மற்றும் மின்விளக்குகள் ஆகியவையும், உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய பல்நோக்கு முனைய நான்கு சக்கர வாகன நிறுத்துமிடம் மூன்று தளங்கள் கொண்ட வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.
புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் நிறுத்துவதற்கான கூடுதல் பேருந்து நிறுத்த வழித்தடங்கள், நவீனமயான இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகன நிறுத்துமிடங்கள், பொது மக்கள் பேருந்துக்கு காத்திருக்க வசதியான இருக்கைகள் ஆகியவையும், பொது மக்கள் பொழுது போக்குவதற்கு ஏதுவாக திரையரங்கம் மற்றும் வணிகவளாகமும் அமைக்கப்பட உள்ளன.
புதிய பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துமிடம் அனைத்து வசதிகளுடன் தனியாக இட ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இந்தப் பணிகளுக்காக தொழில்நுட்ப கலந்தலோசகர் மூலம் விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது என்றார் அவர்.
இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்ட செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜூ கூறியது: பழைய பேருந்து நிலையத்தில் நெருக்கடி இருப்பதால் அதை ஒட்டியுள்ள அரசு போக்குவரத்து பணிமனை இடத்தையும் சேர்த்து கப்பல் வடிவில் புதிதாக பேருந்து நிலையம் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அனைத்து வசதிகளும் விரிவாக்கம் செய்யப்படும் பேருந்து நிலையத்தில் இருக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பணமுறைகேடு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மனுவை திரும்பப் பெற்றார் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்!

என்டிஏ ஊழலின் சின்னமாக விளங்குகிறது: கேரள உயர்கல்வித் துறை அமைச்சர்

தர்மன் போஸ்டர் மேக்கிங் விடியோ!

வீட்டில் எரிவாயு சிலிண்டர் இருக்கிறதா? ஜூலை 1 முதல் புதிய மாற்றம்! நல்ல செய்தியா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


