இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் பதியில் மார்ச் 4இல் அவதார தின விழா

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில்,  மார்ச் 4ஆம் தேதி 186ஆவது அவதார தின விழா நடைபெறுகிறது.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:05 am

DIN

திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில்,  மார்ச் 4ஆம் தேதி 186ஆவது அவதார தின விழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மார்ச் 3ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பணிவிடை,  உகப்படிப்பு,  6 மணிக்கு அன்னதர்மம்,  நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பணிவிடை,  அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதர்மம் நடைபெறுகிறது. 
மார்ச் 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு,  பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது. பின்னர் காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிடுதல்,  அவதார விழா பணிவிடை ஆகியன நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதர்மம் நடைபெறுகிறது. 
ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவர் சுந்தரபாண்டி தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.