பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் உடன்குடியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முன்னாள் மாவட்டத் தலைவர் பி.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். திருச்செந்தூர் தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சிவசெந்தில், கவிஞர் பூவெழில், நகரச் செயலர் ராமமூர்த்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் கவாஸ்கர், வட்டார வர்த்தக காங்கிரஸ் தலைவர் தேவராஜ், வட்டார காங்கிரஸ் துணைத் தலைவர் ரஹ்மத்துல்லா, நிர்வாகிகள் திருமணி, வெற்றிவேல், அழகுவேல், வைரவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் துரைராஜ் ஜோசப் வரவேற்றார். மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைததார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநில துணைத் தலைவர் ஏ.பி.சி.வீ.சண்முகம், மாவட்டப் பொருளாளர் நடராஜன், சிவனேசன் உள்ளிட்டோர் பேசினர்.
பழுதடைந்த சாலைகளை உடனடியாக சீரமைக்க வேண்டும். நிறுத்தப்பட்ட சிற்றுந்துகளை மீண்டும் இயக்க வேண்டும். உடன்குடி பேருந்து நிலையத்துக்குள் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி, பயணிகளுக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. ஏற்பாடுகளை மாவட்ட காங்கிரஸ் இலக்கிய அணி தலைவர் லி.முத்துகுமார் செய்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!

திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம்! விஜய்க்கு தேர்தல் ஆணையம் அனுமதி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
‘கப்பல்கள் அழிக்கப்படும்’.. அமெரிக்க கட்டுப்பாட்டில் ஈரானிய கடற்பரப்பு: அதிபர் டிரம்ப்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

