அமெரிக்காவின் குறைந்த சுங்க வரி வரம்பில் இந்தியா: மத்திய அரசு வரவேற்புபோா்கள் நடக்கும் பகுதியில் கப்பல்களில் வேலைவாய்ப்பு?: இந்தியா்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கைஇந்திய ரூ. 200, ரூ. 500 தாள்களுக்கு 10 ஆண்டுகளுக்குப் பின் நேபாள அரசு அனுமதி!தனியார் பால், தயிர் விலை 2-வது முறையாக உயர்வு!தமிழகத்தில் 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு!தோ்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா இன்று தாக்கல்!
/

அகில இந்திய ஹாக்கி தில்லி, சென்னை, மும்பை அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கிப் போட்டியின் 8ஆவது நாளான வியாழக்கிழமை தில்லி, சென்னை,

Updated On :25 மே 2018, 12:52 am IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடைபெற்று வரும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய அளவிலான ஹாக்கிப் போட்டியின் 8ஆவது நாளான வியாழக்கிழமை தில்லி, சென்னை, மும்பை அணிகள் வெற்றிபெற்றன.
காலையில் நடைபெற்ற ஒரே ஆட்டத்தில் தில்லி சென்ட்ரல் செக்ரட்டரியேட் அணி, சென்னை ஐ.ஓ.பி. அணியை 3-2 கோல் கணக்கில் வென்றது.
பின்னர், மாலையில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் உத்தரப்பிரதேசம் காசியாபாத் ஸ்போர்ட்ஸ் அகாதெமி அணியை, சென்னை இந்தியன் வங்கி அணி 5-1 என்ற கோல்கணக்கிலும், 2 ஆவது ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணியை பெங்களூரு ஆர்மிலெவன் அணி 4-1 என்ற கோல் கணக்கிலும் வென்றன.
3 ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன் நேவி அணி, தில்லி ஓ.என்.ஜி.சி. அணியை 6-2 என்ற கோல் கணக்கில் வென்றது.
9 ஆம் நாளான வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு நடைபெறும் கால் இறுதிப் போட்டியில் தில்லி சென்ட்ரல் செக்ரட்டரியேட் அணியும், பெங்களூரு கனரா வங்கி அணியும் மோதுகின்றன.
மாலை 4.15 மணிக்கு நடைபெறும் முதல் கால் இறுதியில் கபுர்தலா ஆர்.சி.எப். அணியும், பெங்களூரு ஆர்மிலெவன் அணியும், மாலை 6.15 மணிக்கு நடைபெறும் 2 ஆவது ஆட்டத்தில் செகந்திரபாத் தெற்கு மத்திய ரயில்வே அணியும், மும்பை இந்தியன் நேவி அணியும் மோதுகின்றன. 3 ஆவது ஆட்டத்தில் தில்லி ஓ.என்.ஜி.சி. அணியும், சென்னை ஐ.சி.எப். அணியும் விளையாடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.