கோவில்பட்டியில் நிகழ்ந்த இரு தற்கொலை சம்பவங்களில் புதுப்பெண்ணும், சிறுமியும் உயிரிழந்தனர்.
கோவில்பட்டியை அடுத்த இலுப்பையூரணி ஊராட்சி தாமஸ் நகரைச் சேர்ந்த ராமர் - வடிவு தம்பதி மகள் முத்துலட்சுமி(23). ஆசிரியர் பயிற்சி முடித்தவர். இவருக்கும், தருமபுரியில் தனியார் பள்ளி ஆசிரியராக பணியாற்றும் மாரிமுத்து என்பவருக்கும் ஓராண்டுக்கு முன் திருமணம் நடைபெற்றதாம்.
இந்நிலையில், தாமஸ் நகரில் உள்ள பெற்றோர் வீட்டில் கடந்த 4 மாதங்களாக இருந்து வந்த முத்துலட்சுமி, வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்து கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.
சிறுமி சாவு: கோவில்பட்டி, வள்ளுவர் நகர் 1ஆவது தெருவைச் சேர்ந்த சண்முகம் - மாலையம்மாள் தம்பதியின் மகள் சோலையம்மாள்(17) . கோவில்பட்டியில் உள்ள ஜவுளிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த மாதம் சரியாக வேலைக்குச் செல்லாததால் ஊதியம் குறைவாக கிடைத்ததாம். இதனால், பெற்றோர் அவரைக் கண்டித்தனராம். இந்நிலையில், புதன்கிழமை வேலைக்குச் சென்ற சோலையம்மாள் வீட்டுக்கு வரும்போது விஷமருந்தியது தெரியவந்ததாம். இதையடுத்து, அவருக்கு தனியார் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்தார்.இவ்விரு சம்பவங்கள் தொடர்பாக கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை 2026 காரசார விவாதம் - நேரலை! (ஆக. 10)

மகுடம் டிரைலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

சித்தார்த் மகாதேவன் அரைசதம்; சேலம் ஸ்பார்ட்டன்ஸுக்கு 196 ரன்கள் இலக்கு!

நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


