சாத்தான்குளம் மனோன்மணீயம் சுந்தரானார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்துடன் இணைந்து டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பை தொடங்கியுள்ளது.
இதையொட்டி, கல்லூரியில் நடைபெற்ற விழாவுக்கு, திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்புத் துறை அதிகாரி மரிய சகாய ஆண்டனி தலைமை வகித்து, பயிற்சியைத் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சாந்தகுமாரி வரவேற்றார். பேராசிரியை மீனா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். அமுதவாணி, இளநிலை வேலைவாய்ப்புத்துறை அதிகாரிகள் மணிகணேஷ், சண்முகவேல் ஆகியோர் பேசினர்.
இதில் ஒரு வருட பயிற்சி வகுப்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர்களாக பேராசிரியைகள் அமுதா, நீமாதேவ் பொபீனா, மீனா ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாணவிகள் இப்பயிற்சி முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர். பேராசிரியை நீமா தேவ் பொபீனா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வா? இபிஎஸ் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் நிர்மல் குமார்!

கடந்த 5 நிதியாண்டுகளில் 6,255 கிளைகளை திறந்த பொதுத்துறை வங்கிகள்!

RSS கொள்கையில் அமைச்சர் நிர்மல் குமார்! திமுக MLA பேச்சுக்கு கொந்தளித்த அமைச்சர்கள்!
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!
விடியோக்கள்

செலவுகளை ஏன் நீங்கள் குறைக்கவில்லை? பேரவையில் எடப்பாடி பழனிசாமி! | Full Speech


