காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர் சஞ்சய் தத் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் கூறினர்.
சவலாப்பேரியில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக்கு வந்த கமல்ஹாசன், சுப்பிரமணியனின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி, அவரது மனைவி கிருஷ்ணவேணி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
காங்கிரஸ்: சுப்பிரமணியனின் வீட்டுக்கு வந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர் சஞ்சய்தத், தமிழ்நாடு காங்கிரஸ் செயல் தலைவர்கள் மயூரா ஜெயகுமார், ஜெயகுமார் ஆகியோர் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பின்னர், சுப்பிரமணியன் படத்துக்கு மாலை அணிவித்தனர். அப்போது தூத்துக்குடி மாவட்டத் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் திருப்பதிராஜா, ஓ.பி.சி. பிரிவு மாநிலத் தலைவர் நவீன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் செழியன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர், சஞ்சய் தத் செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்த சுப்பிரமணியன் குடும்பத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் உதவிகள் செய்யப்படும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தென்மேற்கு பருவமழை இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (மே 13 2026) 12 ராசிகளுக்கும்! கன்னிக்கு லாபம்!

தடை நீங்கும் விருச்சிக ராசிக்கு... இன்றைய ராசி பலன்கள்!
தவெக அரசு மீது இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு
