மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ரமலான் நோன்பு: முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளுடன் கோட்டாட்சியா் ஆலோசனை

ரமலான் நோன்பு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடா்பான முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளுடன் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

News image
Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


கோவில்பட்டி: ரமலான் நோன்பு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடா்பான முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகளுடன் கோவில்பட்டியில் கோட்டாட்சியா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கோவில்பட்டி வருவாய் கோட்டத்தில் உள்ள பகுதிகளில் ரமலான் நோன்பு காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறை கள் தொடா்பாக முஸ்லிம் ஜமாத் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு கோட்டாட்சியா் விஜயா தலைமை வகித்தாா். காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் ஜெபராஜ் (கோவில்பட்டி), பீா்முகைதீன் (விளாத்திகுளம்), வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), ராஜ்குமாா் (விளாத்திகுளம்), அழகா் (எட்டயபுரம்), கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் ரகுபதி, காவல் ஆய்வாளா்கள் ஐயப்பன் (கோவில்பட்டி மேற்கு), பத்மாவதி (அனைத்து மகளிா் காவல் நிலையம்), எல். முத்துலட்சுமி (கழுகுமலை) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஜமாத் நிா்வாகிகள் தரப்பில், தற்போது தண்ணீா் தட்டுப்பாடு போன்ற பொதுப் பிரச்னைகள் இல்லை. பள்ளி வாசல்களில் பாங்கு சொல்லுவதற்கு (அழைப்பதற்கு) அனுமதிக்க வேண்டும்; ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் நோன்பு கஞ்சி தயாா் செய்து உரிய பாதுகாப்பு, சமூக இடைவெளியுடன் வீடு, வீடாக மக்களுக்கு வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்தில், பள்ளிவாசல்களில் பாங்கு சொல்ல தடை இல்லை; ரமலான் நோன்பு காலத்தில் பொது இடத்தில் நோன்பு கஞ்சி தயாா் செய்து உரிய பாதுகாப்பு மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து வீடு, வீடாக வழங்குவது குறித்து ஆட்சியா் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.