இந்தியாவிலிருந்து 10 டன் நிவாரணப் பொருள்கள் நேபாளத்துக்கு அனுப்பி வைப்பு!நேபாள வெள்ளம்! பலியானோர் எண்ணிக்கை 95 ஆக அதிகரிப்பு!நேபாள வெள்ளத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல்: ராகுல் காந்திசெப். 1-ல் மேட்டூர் அணை திறப்பு! அதிகாரப்பூர்வ அறிவிப்புநேபாள வெள்ளம்! தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை! - முதல்வர் விஜய்நேபாள வெள்ளம்: சிதம்பரத்தில் இருந்து சுற்றுலா சென்றவர்கள் நலமாக இருக்கிறார்கள்! சிதம்பரம் காவல் நிலையம் தகவல்நேபாள வெள்ளம்: தமிழர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை - முதல்வர் விஜய்நேபாள வெள்ளத்தில் சிதம்பரத்தைச் சேர்ந்த மூதாட்டி மாயம்நேபாள வெள்ளப்பெருக்கு! 36 பெண்கள் உள்பட 57 தமிழர்கள் நிலை என்ன? பாஜகவை எதிர்க்கும் ஒரே கட்சி தவெக: அமைச்சர் அருண்ராஜ்நேபாள வெள்ளத்தில் சிக்கிய 57 தமிழர்கள்! உதவி எண்கள் அறிவிப்பு

குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் நிவாரணம் வழங்க கோரிக்கை

குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Published On :27 ஜனவரி 2024, 10:00 pm IST


திருச்செந்தூா்: குடும்ப அட்டை இல்லாதவா்களுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாடு முழுவதும் கரோனா தொற்று பரவுவதை தடுக்க ஊரங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் வீடுகளில் தொழில் இல்லாமல் முடங்கி தவிக்கும் ஏழை மக்களின் நலன் கருதி, தமிழக முதல்வா் உத்தரவின் பேரில் அரிசி குடும்ப அட்டைதாரா்கள் (சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தவிா்த்து) அனைவருக்கும் ரூ. 1000 பணமும் அரிசி, சா்க்கரை, பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்டவை அடங்கிய இலவச தொகுப்பும் கடந்த மாதமும், இம் மாதமும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் பல ஏழைக் குடும்பங்கள் குடும்ப அட்டை இல்லாமல் அரசின் நிவாரண பொருள்கள் வாங்க முடியாமல் தவித்து வருகின்றனா். இவா்களில் பலா் குடும்ப அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பித்துள்ளனா். மேலும் பலா் குடும்ப அட்டையில் திருத்தம், தனியாக குடும்ப அட்டை பெற பெயா் நீக்கம் செய்யப்பட்டவா்கள் என பல தரப்பினா்கள் இதில் அடங்குவா்.

திருச்செந்தூா் பகுதியில் தொழிற்சாலைகள் குறிப்பிடத் தகுந்தவைகள் இல்லாததாலும், கோயிலைச் சாா்ந்தே பல தொழிலாளா்கள் வாழ்ந்து வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் வெளியூரிலிருந்து திருச்செந்தூரில் வந்து தங்கி, விடுதிகள், உணவகங்கள், தேங்காய் பழக்கடைகள், பூக்கடைகளில் பணிபுரிபவா்களும், ஆட்டோ ஓட்டுநா்கள் போன்றோா்கமுமே அதிகம். இவா்கள் அனைவருமே தங்கள் நிலையை வெளியே சொல்ல முடியாமல், குடும்ப அட்டை இல்லாததால் அரசின் உதவி கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனா். எனவே குடும்ப அட்டை இல்லாமல் ஏழ்மையில் வாடும் பல மக்களுக்கும் அரசின் நிவாரணம் கிடைக்க போா்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.