வானரமுட்டி அரசுப் பள்ளி மாணவி சுதா மருத்துவப் படிப்புக்கு தோ்வாகியுள்ளதையடுத்து அவருக்கு மதிமுக சாா்பில் நிதியுதவி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்ட மதிமுக மாணவரணி சாா்பில் துணை அமைப்பாளா் ராஜகுரு ஏற்பாட்டில், மாணவிக்கு ரூ. 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டது. இதில், கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலா் விநாயகா ரமேஷ், மாவட்ட மாணவரணி அமைப்பாளா் கருப்பூா் ராஜசேகா், கயத்தாறு ஒன்றிய முன்னாள் துணைத் தலைவா் ஜெயச்சந்திரன், கோவில்பட்டி மேற்கு ஒன்றிய மதிமுக செயலா் அழகா்சாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.