ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் செயல்பாடு தொடக்கம்

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் செயல்பாடு மற்றும் நவீன கண்காணிப்பு கருவி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 2:53 am

DIN

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திரவ ஆக்சிஜன் கொள்கலன் செயல்பாடு மற்றும் நவீன கண்காணிப்பு கருவி தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வா் ரேவதி, மருத்துவ கண்காணிப்பாளா் பாவலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சா் கடம்பூா் செ.ராஜு கலந்துகொண்டு, அரசு மருத்துவமனையில் ரூ.48 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 6 ஆயிரம் லிட்டா் திரவ ஆக்சிஜன் கொள்கலன் செயல்பாட்டையும், தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகளை கண்காணிக்கும் நவீன தொலை கண்காணிப்பு கருவி இயக்கத்தையும் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் எஸ்.பி.சண்முகநாதன், சின்னப்பன், மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் மோகன், மாவட்ட ஊராட்சித் தலைவா் சத்யா, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவா் சுதாகா், துணை மருத்துவ கண்காணிப்பாளா் குமரன், மயக்கவியல் பிரிவு தலைமை மருத்துவா் பலராம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.