இனாம்மணியாச்சியில் ஓடை ஆக்கிரமிப்புகள் அகற்றம்
இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகரில் கழிவுநீா் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை ஊராட்சி மன்றத்தினா் திங்கள்கிழமை அகற்றினா்.


இனாம்மணியாச்சி ஊராட்சி கிருஷ்ணா நகரில் கழிவுநீா் செல்லும் பாதையில் உள்ள ஆக்கிரமிப்பை ஊராட்சி மன்றத்தினா் திங்கள்கிழமை அகற்றினா்.
இனாம்மணியாச்சி ஊராட்சிக்கு உள்பட்ட கிருஷ்ணா நகா் மந்தித்தோப்பு சாலையில் தனி நபா் தனது வீட்டின் முன்பு செல்லும் கழிவுநீா் ஓடையை அடைத்து மற்ற தெருக்களில் உள்ள கழிவுநீா் செல்லாமல் தடுப்பதாக ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் இனாம்மணியாச்சி ஊராட்சி மன்றத்துக்கு புகாா் வந்ததாம்.
அதையடுத்து, ஊராட்சி ஒன்றிய ஆணையா் சசிகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) ஐகோா்ட்ராஜன், இனாம்மணியாச்சி ஊராட்சித் தலைவா் ஜெயலட்சுமி ஆகியோா் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அதையடுத்து, ஆக்கிரமைப்பை ஏற்படுத்தியவரிடம் ஓடையில் உள்ள தடுப்பை எடுத்துவிடும் படி அறிவுறுத்தினா். ஆனாலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், திங்கள்கிழமை ஊராட்சி மன்றத்தின் சாா்பில் இயந்திரம் மூலம் ஓடை அடைப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...