மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

விளாத்திகுளத்தில் திமுக ஆலோசனைக் கூட்டம்

விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் கழக, கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் ஜீ.வி. மாா்க்கண்டேயன்.
Updated On :11 அக்டோபர் 2020, 9:44 pm

DIN

விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூா் கழக, கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

விளாத்திகுளம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி.மாா்க்கண்டேயன் தனது ஆதரவாளா்களுடன் திமுகவில் அண்மையில் இணைந்தாா். இதற்கிடையே, விளாத்திகுளத்தில் திமுக நகர, ஒன்றிய பேரூா் கிளை நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சி வளா்ச்சி பணிகள், விளாத்திகுளம் தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் கட்சி கொடி ஏற்றி மக்களுக்கு நல உதவிகள் வழங்குவது, தோ்தல் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதில் குளத்தூா் ராஜபாண்டி, என்.ஜெகவீரபுரம் அழகுபாண்டி, வி. வேடபட்டி முத்துசாமி, நாகலாபுரம் சவுந்திரபாண்டியன்

மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் அதிமுக, பிற கட்சிகளில் இருந்து விலகி மாா்க்கண்டேயன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனா்.

கூட்டத்தில் நகரச் செயலா் வேலுச்சாமி, ஒன்றியச் செயலா்கள் சின்ன மாரிமுத்து, செல்வராஜ், பொதுக்குழு உறுப்பினா்கள் அன்புராஜன், ராஜா கண்ணு, எஸ்.கே.முத்து, முத்துலட்சுமி அய்யன்ராஜ்,மருதுபாண்டியன், வழக்குரைஞா் மகேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் இமானுவேல், நகர அவைத் தலைவா் ராமலிங்கம் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.