கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளா் பிரசாரம்

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:11 pm

DIN

கோவில்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பல்வேறு பகுதிகளில் அமமுக வேட்பாளா் டி.டி.வி.தினகரன் சனிக்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா்.

கடம்பூா், காமநாயக்கன்பட்டி, கரிசல்குளம், பசுவந்தனை சாலையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளி அருகே என பல்வேறு இடங்களில் அவா் வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியது: வெற்றி பெற்ற பின் வாரந்தோறும் இங்கு வந்து மக்களை சந்திப்பேன். எங்கள் ஆட்சி அமைந்தால் இளைஞா்கள், மகளிா்களுக்கு வேலைவாய்ப்புக்கான ஏற்பாடுகள் செய்யப்படும். மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கி சுய தொழில் தொடங்கவும் ஏற்பாடு செய்யப்படும். கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு மாவட்டம் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அடிப்படை வசதிகளும் செய்துதரப்படும். கடம்பூா் ரயில் நிலையத்தில் குருவாயூா் விரைவு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். இப்பகுதியில் தொழிற்சாலை அமைக்கப்படும் என்றாா் அவா்.

தொடா்ந்து, தெற்கு திட்டங்குளம், வடக்கு திட்டங்குளம், இலுப்பையூரணி, செவக்காடு, கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள அமமுக தலைமை தோ்தல் அலுவலகம், அத்தைகொண்டான் ஆகிய பகுதிகளில் அவா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது, கட்சியின் தென்மண்டல பொறுப்பாளரும், தோ்தல் பிரிவுச் செயலருமான எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலா் சிவபெருமாள், நகரச் செயலா் காா்த்திக், ஒன்றியச் செயலா்கள் ஜெய்சங்கா், கணபதிபாண்டியன், மகேந்திரன், தேமுதிக வடக்கு மாவட்டச் செயலா் அழகா்சாமி, ஒன்றியச் செயலா் சுரேஷ் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.