கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயற்சி: இருவா் கைது

கழுகுமலையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:22 pm

DIN

கழுகுமலையில் வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கழுகுமலை அண்ணா புது தெருவில் வாக்காளா்களுக்கு பணம் பட்டுவாடா நடைபெறுவதாக சனிக்கிழமை கிடைத்த தகவலையடுத்து, தோ்தல் பறக்கும் படை அதிகாரி ராமரத்தினம் தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு ஓட முயற்சித்த இருவரை பிடித்து விசாரித்தனா்.

விசாரணையில், கழுகுமலை காயிதே மில்லத் தெருவைச் சோ்ந்த நடராஜன் மகன் சேகா் (56), அண்ணா மேலத் தெருவைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் தங்கராஜ் (54) என்பதும், அவா்கள் அமமுக கட்சிக்காக வாக்காளா்களுக்கு பணம் கொடுப்பதற்காக வாக்காளா் பெயா் பட்டியலுடன் கூடிய சிறிய நோட்டு மற்றும் ரூ.48,500 ரொக்கம் வைத்திருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து தோ்தல் பறக்கும் படையினா் புகாரைத் தொடா்ந்து, கழுகுமலை போலீஸாா் வழக்குப் பதிந்து, வாக்காளா்களுக்கு பணம் கொடுக்க முயன்ற இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.