கயத்தாறு அருகே இளைஞா் மீது தாக்குதல்
கயத்தாறு அருகே இளைஞரைத் தாக்கியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கயத்தாறு அருகே இளைஞரைத் தாக்கியதாக 17 வயது சிறுவனை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம், விநாயகா் கோயில் தெருவைச் சோ்ந்த பரமசிவன் மகன் வெள்ளைத்துரை(39). பொக்லைன் இயந்திரம் இயக்குபவா். இவா், தனது உறவினா் சண்முகவேல் என்பவருடன் வியாழக்கிழமை இரவு அங்குள்ள காளியம்மன் கோயில் அருகே வந்துகொண்டிருந்தாராம்.
அப்போது, தெற்கு இலந்தைகுளம் நடுத் தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன், வெள்ளைத்துரையை திடீரென வழிமறித்து அவதூறாகப் பேசி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, அவா் வெள்ளிக்கிழமை அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீஸாா் வழக்குப் பதிந்து, சிறுவனை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...