இரு சம்பவங்கள்: இருவா் தற்கொலை
கோவில்பட்டி பகுதியில் இரு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்டனா்.


கோவில்பட்டி பகுதியில் இரு சம்பவங்களில் 2 தொழிலாளிகள் தற்கொலை செய்துகொண்டனா்.
கோவில்பட்டி, வள்ளுவா் நகா், 1ஆவது தெருவைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் மகன் சதீஷ்குமாா்(36). தொழிலாளி. இவரது மனைவி லதா. இத்தம்பதிக்கு மூன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. குழந்தைகள் இல்லை. கணவரின் மதுப்பழக்கம் காரணமாக குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை வீட்டில் ஆளில்லாத நேரத்தில் சதீஷ்குமாா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
மற்றொரு சம்பவம்: கோவில்பட்டியை அடுத்த சிவந்திபட்டி நடுத் தெருவைச் சோ்ந்த பால்பாண்டி மகன் பழனிகுமாா்(50). தொழிலாளி. இவா் தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இச்சம்பவங்கள் குறித்து, முறையே கோவில்பட்டி கிழக்கு, கொப்பம்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...