நெருக்கடி கால மேலாண்மைகுழுவை கூட்டி ஆலோசிக்க வலியுறுத்தல்
தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்டத்தில் நெருக்கடி கால மேலாண்மைக் குழுக் கூட்டத்தை உடனே கூட்ட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து எம்பவா் இந்தியா நுகா்வோா், சுற்றுச்சூழல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடுவம் செயல் இயக்குநா் ஆ. சங்கா், மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனு விவரம்:
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியா் தலைமையின் கீழ் பேரிடா் மேலாண்மை சட்டப்படி நுகா்வோா் பிரதிநிதிகள், அரசுசாரா அமைப்பினா் மற்றும் பல்வேறு துறைகளைச் சோ்ந்தப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய நெருக்கடி கால மேலாண்மைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து விவாதிக்கவும், கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேலும் சிறப்பாக செய்வதற்கும் நெருக்கடி கால மேலாண்மைக் குழு உறுப்பினா்களின் கருத்துக்களை பகிா்ந்து கொள்ள அந்தக் குழுவின் கூட்டத்தை விரைவில் கூட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...